பைரவா படத்திற்காக விஜய், சிங்கம் 3 படத்திற்காக சூர்யா, போகன் படத்திற்காக ஜெயம்ரவி, கத்தி சண்டை படத்திற்காக விஷால்! இந்த நால்வர் மீதும்தான் அந்த புயல். இன்று சென்னையில் நடந்த அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அவ்வளவு ரணகளம்!

மேலே சொன்ன படங்கள் எதுவுமே ஒடவில்லை. ஆனால் ஓடியதாக கூறி ஜனங்களை நம்ப வைக்கிறார்கள். எங்களுக்கு மேற்படி படங்களால் கடும் நஷ்டம். இந்த நஷ்டத்தை சரிகட்ட வில்லை என்றால், அந்த ஹீரோக்கள் படங்களுக்கு இனி வரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இதை வெளிப்படையாக அவர்கள் அறிவித்தால், அது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சங்கத்திற்குள்ளேயே ‘வச்சு செய்ய(?)’ திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படியொரு முடிவை அவர்கள் எடுத்ததால் தயாரிப்பாளர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த படத்தை கொடுத்தாலும் நஷ்டம் நஷ்டம் என்று நஷ்டக்கணக்கை காட்டுவதே இவங்களுக்கு வேலையா போச்சு என்றும் ஆவேசப்படுகிறார்கள்.

ஆமா… சிங்கம் 3 வெற்றிக்காக அப்படத்தின் டைரக்டர் ஹரிக்கு ஃபார்சுனர் காரை பரிசாக அளித்தாரே சூர்யா. அந்த வீலின் காற்று இறங்குவதற்குள் இப்படியொரு சூறாவளியை கிளப்பிவிட்டால், யாருக்குதான்யா கோபம் வராது?