விஜய், தனுஷுக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புக்கும் என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கே.

விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு அமெரிக்காவில் தான் ஷூட்டிங் என்றார்கள். தனுஷும் தன் படங்களுக்கு ஷூட்டிங்குக்கு அமெரிக்கா போக திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், இந்த ட்ரம்ப் பொறுப்பேற்றதும், ஏக கெடுபிடி. முகப்புத்தகம் ஒன்றிலிருந்து, கூகுள் வரை என்னய்யா நடக்குது இங்கேன்னு ஒரே டென்ஷன். இதற்கெல்லாம் கவலை படாத ட்ரம்ப், சில கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இதனால் உலக நாடுகள் பல அதிருப்தியில் உள்ளன. அமெரிக்காவில் இவ்வளவு காலம் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கே சிக்கல். இதில் ஷூட்டிங்குக்கு  போறவங்களுக்கு மட்டும் விசா கெடுபிடி தாங்கலை.

விஜய் , தனுஷ் படக்குழுவின் திட்டங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்பால், ஷூட்டிங் லண்டனுக்கு போகிறது.