Tamil Cinema News | சினிமா செய்திகள்
டென்ஷனில் வடசென்னை மீனவர்கள்! நெருக்கடியில் வெற்றிமாறன்

பிரச்சினைகள் இல்லாத வெற்றி கிடைப்பது மிகக் கடினம் அந்த நிலைமை தான் வடசென்னை படத்திற்கு கிடைத்துள்ளது. தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.கண்டிப்பாக வெற்றி பெறும் ஆனால் படத்தை பார்த்த மீனவர்கள் என்ன கூறினார்கள். வடசென்னை படத்தில் வரும் ஆபாச வார்த்தைகள் கொலைகள் கடத்தல் என அவர்களை டென்ஷன் படுத்தியுள்ளது.
வடசென்னை படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சில இளைஞர்கள் ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர் படத்தை எடுத்தவர் கண்டபடி திட்டி நாங்கள் பயன்படுத்தும் படகு கொள்ளையடிக்க மட்டும் தா? எங்கள் வீட்டுப் பெண்கள் இப்படித்தான் பேசுவார்களா? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த சினிமாக்காரர்கள் எங்களை கத்தியும் கொலையுமா காண்பிப்பதற்கு மட்டும்தான் நாங்கள் இருக்குமா என கேள்வி கேட்டுள்ளனர்.
எங்களைப் பற்றி நல்லபடியாக காமிக்க ஒரு காட்சியும் இல்லை படத்தில் காண்பிக்கப்படும் படகுகள் அனைத்தும் கள்ளக்கடத்தல் கொலை என பயன்படுவதற்கு மட்டுமே உள்ளன என்பது போல் உள்ளது. எங்கள் தொழிலை கேவலமாக காண்பிக்கின்றன கோவமா பேசுகின்றனர். அந்த இளைஞர்களின் குரல் எந்த சினிமாக்காரர்களுக்கு கேட்கும் என்று தெரியவில்லை. இந்த பிரச்சினை இதோடு நிற்குமா தொடருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
