Connect with us
boomerang-movie

பேட்ட படத்திற்கு வந்த புது சிக்கல்.. அடிச்சி தூக்குவாரா ரஜினி

petta-movie

News | செய்திகள்

பேட்ட படத்திற்கு வந்த புது சிக்கல்.. அடிச்சி தூக்குவாரா ரஜினி

பேட்ட படத்திற்கு வந்த புது சிக்கல்

பேட்ட படம் சன் பிக்சர்ஸின் விபரீத முடிவு பெரும் சிக்கலை சந்திக்கிறது. சன் நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி நிறுவனமாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் இறங்கிதான் செல்ல வேண்டும், ஆனால் சன் நிறுவனத்தின் துணிச்சலான முடிவு சிக்கலை சந்திக்க நேரிடுமோ என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

நாளை மாபெரும் விழாவாக உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் பேட்ட படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாகிறது. ஆனால் தெலுங்குவில் நாளை அதே நாளில் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘என்.டி.ஆர்” மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘வினய விதேய ராமா’ திரைப்படங்கள் வெளி வருகிறது.

வழக்கமாக தெலுங்கில் மாஸ் நடிகர்கள் இரண்டு பெரிய நடிகர்கள் படம் வெளிவரும் பொழுது 90 சதவீத தியேட்டர்களுக்கு சென்று விடும் அதே போல இந்த தடவையும் 90 சதவிகித தியேட்டர்களில் அவர்களுக்கே சென்றுவிட்டது 10% தியேட்டரில் மட்டும் படம் ரிலீசாகிறது.

இதுக்குதான் ஆரம்பத்திலேயே ஜனவரி 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தெலுங்கு விநியோகஸ்தர்கள் கூறினார்கள் ஆனால் சன் நிறுவனம் அதனை மறுத்து விட்டது உலகம் முழுவதும் ஒரே நாளில் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும் என்று அடம்பிடித்து ரிலீஸ் செய்கிறது.

ஒருவேளை பேட்ட படம் நன்றாக இருந்தால் தெலுங்கில் வெற்றி பெற்றால் ரஜினிக்கு கூடுதல் பெயரே கிடைக்கும். சுமாராக இருந்தால் மட்டுமே சிக்கல். பொருத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top