இந்த பிக் பாசை என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதனால் இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ.. சீரியலில் ஆரம்பித்து வீட்டில இருப்பவர்களை ஒரு வேலை செய்ய விட மாட்டேன்குது.

முதலில் ஜாலியாக உள்ளே போன அத்தனை பேரும் விட்டால் போதும் என்று ஓடி வருகிற நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் பிக் பாஸ் வீட்டில். ஏன்? சொந்தங்களும் நட்புகளும் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே நின்று கதறினால் கூட, உள்ளே இருக்கும் பிரபலங்களுடன் அவர்களை சந்திக்க விட்டால்தானே? போகட்டும்… அதுவல்ல பிரச்சனை. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வீட்டுக்குப் போய்விட்டார்கள் காயத்ரியின் அம்மாவும், டான்ஸ் மாஸ்டர் கலாவும். உள்ளே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்.

அதிகம் படித்தவை:  பழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெரியுமா.!

“உங்களை நம்பிதான் என் பெண்ணை அனுப்பினேன். ஆனால் அவளை நீங்களே அசிங்கப்படுத்திட்டீங்க. அவ கால்சியம் குறைபாடுன்னு சாப்பிட்ட மில்க் பவுடர் உங்களுக்கு பெரிய விஷயமா போச்சா? அதை காட்டாம தவிர்த்திருக்கலாமே?” என்று கூப்பாடு போட்டாராம் காயத்ரியின் மம்மி. கூடவே போன கலாவும் தன் பங்குக்கு கண்ணீர் வடிக்க… செய்வதறியாமல் நின்ற கமல், அப்புறம் மெனக்கெட்டு விளக்கினாராம்.

அதிகம் படித்தவை:  biggboss-ல் கோபப்பட்ட கமல்-அலறி அடித்து கொண்டு கெஞ்சும் போட்டியாளர்கள்.

“அந்த நிகழ்ச்சியின் போக்கு என் கையில் இல்லை. கிரியேட்டிவ் டீம் தருகிற விஷயங்களை நான் தொகுத்து பேசுகிறேன். அதில் இவ்வளவுதான் என் பங்கு” என்று சொன்ன பிறகும் நம்பவில்லையாம் தி கிரேட் மம்மி. இதை தொடர்ந்துதான் காயத்ரியின் ஹேர் பேச்சுக்கும், வெளியே வா. வச்சுக்குறேன் என்ற மிரட்டலுக்கும் அதிக ரியாக்ஷன் காட்டாமல் விட்டுவிட்டாராம் கமல்.

அடுத்த முறையும் ஆழ்வார்ப்பேட்டை ரணகளப்பட்டால் என்னாவது என்கிற அச்சம்தான் காரணம் போல!