Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைரவா வசூலுக்கு தலைவலி .! பிரச்சனை ஆரம்பித்தது..
நடிகர் விஜய் படங்கள் என்றாலே பல பிரச்சனைகளை சந்தித்து வருவது சாதாரணம். தெறி படம் கூட எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டு ஏரியாவில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பைரவா படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.
இந்நிலையில் கேரளாவில் ஜனவரி 10 முதல் திரையரங்குகள் ஒரு சில பிரச்சனைகளால் மூடுப்படுகின்றதாம், அதன் பிறகு எப்போது திறக்கப்படும் என்ற தகவல் இன்னும் வரவில்லை.
இதனால் பைரவா படம் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்க, தற்போது வந்துள்ள இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
