நடிகை த்ரிஷா பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆர்யா.

ரியாலிட்டி ஷோக்கள் தான் சின்னத்திரையில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் பிக்பாஸ் என்றால் இந்த வருடம் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்தியில் பல சீசன்கள் தாண்டிய சுயம்வர் நிகழ்ச்சியின் ரீமேக் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு இது புதிது தான். அங்கு கலந்து கொண்ட பிரபலங்கள் யாரும் தேர்ந்தெடுத்த துணையை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கோலிவுட் ஹீரோ ஆர்யா கண்டிப்பாக அப்படி சொதப்ப மாட்டார். செய்தால் பலரும் கலாய்க்க தொடங்கி விடுவார்கள் என்பதால் கண்டிப்பாக திருமணம் செய்வார் என நம்பப்பட்டது.

அதைபோல, சில பெண்களிடம் பாசமாக இருந்தார் ஆர்யா. இவர் தான், அவர் தான் என ரசிகர்கள் அடித்து கொள்ளாதது தான் குறை. ஆர்யாவும் இறுதி போட்டியில் சொல்கிறேன் என பில்டப்பை மட்டும் குறைக்கவே இல்லை. இதை தொடர்ந்து, அவர் சொன்ன இறுதி போட்டியும் வந்தது. பலருக்கும் தங்கள் விருப்பமானவர் ஆர்யாவின் துணையாக வேண்டும் என ஆர்வம் பற்றிக்கொண்டது. ஆனால், ஆர்யாவோ ஒருவரை திருமணம் செய்து கொண்டால் மற்ற இருவருக்கு கல்யாணம் நின்றது போல் ஆகிவிடும். (அப்போ, மூணு பேரையா கல்யாணம் பண்ணிக்க முடியும்) இதனால், இந்த மேடையில் யாரையுமே அறிவிக்க போவது இல்லை என பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொன்னார். இதை தொடர்ந்து, அவருக்கு பல எதிர்ப்புகள் சமூக வலைத்தளத்தில் நிலவியது.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவின் ட்வீட்டால் மீண்டும் பெண்களை மதிக்க தெரியாதவர் என சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் குஞ்சுமணி. இந்த வருடம் உனக்கு சிறந்ததாக அமையும். இந்த வருடம் உன் எல்லா திரைப்படத்தையும் எதிர்பார்க்கிறேன். நீ தான் பெஸ்ட் எனப் பதிவிட்டு இருந்தார்.

அப்பதிவிற்கு த்ரிஷா ரசிகர்கள் ஆர்யாவை கடுமையாக சாடி இருக்கின்றனர். ஒரு நடிகையை அழைக்க வேறு வார்த்தையே கிடைக்கவில்லை. இருவருக்கும் உள்ளது என்றால் பொதுவெளியில் போடலாமா என வரிந்து கட்டினர்.

ஆர்யா கடந்த வருடமும் த்ரிஷாவிற்கு இப்படி தான் வாழ்த்து சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.