Shahrukh-Khan

ஷாருக்கான் மீது மை ஊற்ற போவதாக கூறிய கலிங்கசேனா அமைப்பு போராட்டத்தை கைவிட்டது. இதனால் இன்று தொடங்க உள்ள ஹாக்கி உலகக் கோப்பை நிகழ்ச்சியில் ஷாருக்கான் மற்றும் ரகுமான் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

Shahrukh-Khan

பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் ஷாருக்கான். இவர் பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ஜீரோ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றனர்.

அதிகம் படித்தவை:  ரஹ்மான் பாட ஷாருக்கான் ஆட.. இணைகிறது மாபெரும் கூட்டணி.. ஆனா சினிமா இல்லை

ஷாருக்கான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர். அதில் ஷாருக்கான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து நடித்துள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான அசோகா படத்தில் ஒடிசாவின் பண்பாட்டை இழிவாக அமைக்கப்பட்டுள்ளதாக தொடக்க விழாவிற்கு வரும் ஷாருக் கான் மீது மை ஊற்ற போவதாக கலிங்க சேனா அமைப்பு அறிவித்தது. இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் முகமது முஷ்டாக் அகமது. இவர் கேட்டுக் கொண்டதால் அந்த போராட்டமானது கைவிடப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொள்வார் என கூறியுள்ளனர்.