Connect with us

Cinemapettai

மாதவனுக்கு வந்த சோதனை.. யாரை நம்பியும் நான் இல்லை.. நேரடியாக களத்தில் இறங்கினார்

madhavan-new-movie

Cinema News | சினிமா செய்திகள்

மாதவனுக்கு வந்த சோதனை.. யாரை நம்பியும் நான் இல்லை.. நேரடியாக களத்தில் இறங்கினார்

மாதவன் அடுத்த அவதாரம்

மாதவன் நடிப்பில் தயாராக இருந்த ராக்கெட்ரி தி நம்பி படம் சில பிரச்சினைகளில் சிக்கி இருந்தது. ஏற்கனவே கதை தொடர்பான பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் மகாதேவனுக்கும், மாதவனுக்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிகிறது.

அதனால் இந்த படத்தை தற்பொழுது மாதவனே டைரக்ட் செய்யப்போகிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தனை வருட சினிமா பயணத்தில் மாதவன் முதல் முறையாக ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது இதனைப் பாராட்டி பிரதமர் மோடி அவர்களும் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

படத்தை பற்றின அடுத்தடுத்த அறிவிப்புகள் இனிமேல் வெளிவரும் என தெரிகிறது. கதை தொடர்பான பிரச்சினையும் கோர்ட் வரை சென்றுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் பின்னர் இந்த படம் மாதவன் வெற்றிகரமாக எடுப்பார் என நம்பிக்கை வைத்துள்ளனர் மாதவன் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top