வேட்டையன் பட ஆடியோ விழாவில் குளறுபடி! சர்ச்சை.. ரஜினிக்கு வந்த மிகப்பெரிய தலைவலி

லைகா நிறுவனத்தின் தவறான முடிவால் வேட்டையன் பட ஆடியோ விழாவில் குளறுபடிகள் ஏற்பட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இரண்டு சிங்கில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அப்போது ஹன்டர் வன்ட்டார் என்ற பாடலுடன் டீசரும் வெளியாகி வெளியானது. இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளார். இது எண்கவுண்டரை ஊக்குவிப்பதாக உள்ளது என்று ஒருபுறம் சர்ச்சையாகியுள்ளது.

மேலும், ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, போலி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டதால் கூட்டல் வழிந்ததாகவும் நிறையப் பேரால் உள்ளே போக முடியாமல் வெளியே நின்றதாக கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நிகழ்ச்சியில் ஏற்பட்டதுபோல் அதிகளவு டிக்கெட்டுகள் அடித்து விநியோகம் செய்யப்பட்டதன் விளைவுதான் எனத் தகவல் வெளியாகிறது.

இதற்கு பலரிடம் இருந்து அழுத்தங்கள் வந்ததால்தால் கேட்பவர்களுக்கு எல்லாம் டிக்கெட் அடித்துக் கொடுத்ததால் முறையான நடவடிக்கை எடுக்கமுடியவில்லை எனவும், நிலைமைச் சமாளிக்க முடியாததற்கு, தயாரிப்பு நிறுவனம் தரப்பில்தான் முன்யோசனை இன்றி எடுக்கப்பட்ட முடிவுதான் காரணம் கூறப்படுகிறது.

இந்த வேட்டையன் பட ஆடியோ நிகழ்ச்சியால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News