வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

திருமண மண்டபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்.. குடும்ப மானத்தை காப்பாற்றுவாரா பார்வதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ராஜா ராணி 2. இத்தொடரில் சரவணன் தங்கை பார்வதிக்கும் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் அதை கொடுக்கும் வகையில் பார்வதியின் முன்னாள் காதலன் விக்கி செயல்பட்டு வருகிறான்.

அதாவது இவர்கள் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்துக்கொண்டு பார்வதியை மிரட்டி வருகிறான். ஆனால் இதை அறிந்த சரவணன் மற்றும் சந்தியா இருவரும் பார்வதியிடம் என்ன நடந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஆறுதல் சொல்லி உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் மண்டபத்திற்கு சரவணன் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் விக்கியை நினைத்த பயத்திலேயே உள்ளார் பார்வதி. அதேபோல் மண்டபத்திற்கு விக்கி வந்துபோல் பார்வதி கனவு காண்கிறார்.

அதேபோல் விக்கியும் மண்டபத்திற்கு முன்பு வந்து பார்வதிக்கு போன் செய்து மிரட்டுகிறான். ஒரு மணி நேரத்துக்குள்ள நீ வரலைன்னா உன்னோட குடும்ப மானத்தையே கெடுத்துடுவேன் என விக்கி சொன்னதால் பயந்து போகிறார் பார்வதி.

மேலும் தன்னால் குடும்ப மானம் போகக்கூடாது என்பதால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார் பார்வதி. ஆனால் கண்டிப்பாக சந்தியா அந்த நேரத்தில் வந்து பார்வதியை காப்பாற்றி விடுவார். மேலும் சரவணன், சந்தியா இருவரும் விக்கியை ஏதாவது செய்து பார்வதியின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைப்பார்கள்.

ஆனால் பார்வதியின் திருமணத்திற்குப் பிறகு விக்கி மீண்டும் பார்வதியின் வாழ்க்கையில் குறுக்கீடு அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு பல அதிரடி திருப்பங்களுடன் இந்த வார ராஜா ராணி 2 தொடர் வர இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News