கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜோடி ஒன்றுக்கு குருவாயூரப்பன் கோவில் திருமணம் நடைபெற்றது. சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் புதுமண ஜோடிக்கு வரவேற்பு நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை கொடுத்தனர்.

பரிசு பொருட்களை கொடுத்த மணமக்களை வாழ்த்தியவர்கள் விருந்தில் கலந்து கொண்டு 17 வகை கூட்டுக்கள், 3 வகை பாயாசங்களுடன் ருசி பார்த்து கொண்டிருந்தனர்.

அந்த பெண் உண்மையை மறைக்காமல் சொன்னாரா? அல்லது காதல் கைகூடாத விரக்தியில் சொன்னாரா என்பது தெரியவில்லை. இதனால் திடீர் என ஆவேசம் அடைந்தார் மணமகன் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசி ஆவேசத்தில் சத்தம் போட் டார். இரு வீட்டு உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து என்ன? என்ன? என்று ஆளாளுக்கு விசாரித்தனர்.

மணமகன் மணமகளுக்கு காதல் ஒருவன் இருந்து இருக்கிறான் அவனை திருமணத்திற்கு அழைத்து அவனையே என்னிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள் . இவளுக்கு என்ன தைரியம் இருக்கும் இந்த பெண் எனக்கு வேண்டாம் என கூச்சல் போட்டார்.

இரு வீட்டாரும் கோவில் வளாகத்தில் அமர்ந்து சமரசம் பேசினார்கள். ஆனால் மாப்பிள்ளையோ அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்-.

சில நிமிடங்களுக்கு முன்பு தான் கட்டிய 9 பவுன் தாலி சங்கிலியை கழட்டி தரவேண்டும். ரூ.1 லட்சம் மதிப்பில் வாங்கி கொடுத்த செல்போன் மற்றும் பரிசு பொருட்களை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். வேறு வழியின்றி மணப்பெண்ணும் தாலியை கழட்டி கொடுத்தார்.

ஏமாற்றப்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் மணமகன் குருவாயூர் போலீசில் புகாரும் செய்தார். அதில் காதலன் இருப்பதை மறைத்து எனக்கு திருமணம் செய்து கொடுத்தது மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. திருமண செலவு ஆகியவற்றுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடாக வழங்கும்படி கூறி உள்ளார்.