டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் பெரிய சிக்கல்.. முடிவு சாதகமாக வருமா? எதிர்பார்ப்பில் இந்திய வீரர்கள்

இந்திய ஏ அணி இங்கிலாந்திலும், இந்திய பி அணி இலங்கையிலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய ஏ அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய பி அணி, இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ளது.

தற்போது இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்தனர். ஏற்கனவே ஓபனிங் வீரரான சுப்மன் கில்லும் காயத்தில் தான் உள்ளார். ஆகையால் இலங்கையில் விளையாடிக்கொண்டிருக்கும் பிரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும் அவர்களுக்கு பதிலாக பிசிசிஐ தேர்வு செய்தது.

Sky-Shaw-Cinemapettai.jpg
Sky-Shaw-Cinemapettai.jpg

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கையில் இருந்து செல்லவுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே கொரோனவால் பாதிக்கப்பட்ட க்ருனால் பண்டியாவின் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் இவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ இங்கிலாந்து செல்ல விமானம் ஏற வேண்டும் என்றால், மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மூன்றிலுமே நெகட்டீவ் என முடிவுகள் வர வேண்டும்.

எனவே இன்னும் 3 நாட்களுக்குள் இருவருக்கும் பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்துவிடுமா என்பது சந்தேகம்தான்.  அதனால் இவர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்