Politics | அரசியல்
ரஜினி, பாஜக உறவில் விரிசல்.. ரசிகர்கள்தான் முக்கியம் என முடிவு
நீண்ட வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்த ரஜினிகாந்த், பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரஜினிகாந்த் ஆரம்பிக்கப்போகும் தனிக்கட்சி தான் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் தேவை என்ற முடிவில் ரஜினிகாந்த் இருந்தார். இதனால் அவர் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற முடிவை பல வருடங்களாக யோசித்து தற்பொழுது எடுத்தார்.
அந்த நேரம் பார்த்து பாஜக தமிழகத்தில் உள்ளே கால் வைக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஒன்றே முடிவு என்ற நிலையில் உள்ளதால் பாஜக அவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் பின்வாங்கியுள்ளது.
ஏனெனில் பாஜகவின் திட்டம் ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக வைத்துவிட்டு, பின்பு பாஜகவின் வளர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்கள். ரஜினியை முதல்வன் அர்ஜுன் போல நினைத்து கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றபடுவார்கள். புதிதாக வந்த ஜெகன் மோகன் ரெட்டி முதல்வன் அர்ஜுன் போல செயல்படுகிறார்.
அதனால் பாஜகவுடன் ரஜினிகாந்த் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்று ரஜினிக்கு புரிந்துவிட்டது, மேலும் ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக பாஜகவை ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் அவர்களும் தமிழர்கள்தானே.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ளார். அதனால் கண்டிப்பாக ஆதரவு மாட்டோம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் ரஜினிக்கு தெரியபடுத்தி உள்ளது பாஜக.
