fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இவரை மட்டும் டீம்மில் சேருங்க- டெல்லி நீங்க கட்டாயம் பைனல் ஆடுவீங்க

Sports | விளையாட்டு

இவரை மட்டும் டீம்மில் சேருங்க- டெல்லி நீங்க கட்டாயம் பைனல் ஆடுவீங்க

ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே மீது. அதில் இன்று டெல்லி காப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் அபு தாபியில் மோதுகின்றன. இதுவரை கோப்பையை வென்றிடாத டெல்லி காப்பிடல்ஸ் மீதே பலரது கவனமும் உள்ளது. பிளே ஆப் ஆடிய நான்கு டீம்களில் இதுவரை பைனல் போட்டி வரை செல்லாத டீமும் இவர்கள் தான்.

டெல்லி டேர்டெவில்ஸ் ஆக இருந்த நேரத்தில் பல ஏற்றம் தடுமாற்றத்தை பார்த்த டீம். கடந்த முறை டெல்லி காப்பிடல்ஸ் என மாறிய பின் டீம் வேற லெவல் சென்று விட்டது. இளம் வீரராக இருப்பினும் கேபிடேன்ஷிப் மெட்டீரியல் என நிரூபித்துவிட்டார் ஷ்ரேயஸ் ஐயர்.

DC

அஷ்வின், தவான், ரபாடா, ஸ்டோனிஸ் உதவியுடன் ஷ்ரேயாஸும் இணைந்து கலக்க தரமான டீம் தான். ரிக்கி பாண்டிங் வழுக்காட்டுதலில் சூப்பர் ஆக தொடங்கியது சீசனை ஆனால் சில போட்டிகளாக தடுமாறி வருகிறது. எனினும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நேரம் இது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒபெநிங் இந்த டீமுக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. தவான் பெரிய ஸ்கோர் அடிப்பது இல்லையெனில் சொற்ப ரன்னில் அவுட் ஆகிறார். ப்ரித்வி ஷா தீடீரெனே பார்ம் அவுட் ஆகிவிட்டார். மாற்று வீரர் ரஹானேவும் சிறப்பாக செயல்படுவதில்லை. அதே போல பண்ட் பெரிதாக மத்திய வரிசையில் சாதிக்கவில்லை.

இந்த போட்டியில் கட்டாயம் வெஸ்ட் இன்டீசின் ஷிம்ரோன் ஹெட்மயரை கட்டாயம் சேர்க்க வேண்டும். அது டீம்மின் மத்திய வரிசைக்கு உதவும். ஐயர் மற்றும் பண்ட் மீதுள்ள பரம் குறையும். டேனியல் சாம்ஸ் பதிலாக ஹெட்மயரை சேர்க்கலாம், ரஹானே அல்லது ஷாவிற்கு பதிலாக மோஹித் சர்மா  / ஹர்ஷல் பட்டேலை சேர்ப்பது அபூ தாபி ஆடுகளத்துக்கு ஏற்றது. முதலில் பெட் செய்யும் சூழல் ஏற்படின் தவானுடன் ஸ்டோனிஸ் அவர்களை ஒபெநிங் ஆட அனுமதிக்கலாம்.

உத்தேச 11 – 1 Marcus Stoinis, 2 Shikhar Dhawan, 3 Ajinkya Rahane , 4 Shreyas Iyer (capt), 5 Rishabh Pant (wk), 6 Shimron Hetmyer, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Kagiso Rabada, 10 Harshal Pate l/Mohit Sharma, 11 Anrich Nortje.

இல்லை எங்களுக்கு ஷா, பண்ட், தவான் போன்ற மேட்ச் வின்னர்கள் மீது நம்பிக்கை உள்ளது என நிர்வாகம் நினைக்கும் பட்சத்தில் சாம்சிற்கு பதிலாக சந்தீப் லாமிச்சனே என்ற ஸ்பின்னரை ஆட வைக்கலாம். பெங்களுருவில் கோலி, ஆடம் சம்பா அவர்களை ஆடவைத்தது போன்ற முடிவு. டீமுக்கு கட்டாயம் பிளஸ் தான்.

உத்தேச 11 – 1 Prithvi Shaw, 2 Shikhar Dhawan, 3 Ajinkya Rahane , 4 Shreyas Iyer (capt), 5 Rishabh Pant (wk), 6 Marcus Stoinis, 7 Axar Patel, 8 R Ashwin, 9 Kagiso Rabada, 10 Sandeep Lamichhane, 11 Anrich Nortje

பாண்டிங் என்ன முடிவு எடுக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top