விஜயகாந்தின்  ‘ராஜ்ஜியம்’,  தல  அஜித்துடன் ‘ராஜா’,  சீயான் விக்ரமின்  ‘காதல் சடுகுடு’ போன்ற  படங்களில் நடித்த பிரியங்கா திரிவேதி  தான் அந்த ரீ-என்ட்ரியாகும் நாயகி.

பிரியங்கா திரிவேதி

பெங்காலி படத்தில் அறிமுகம் ஆனாலும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று பல மொழிகளில் கலக்கியவர். பின்னர் கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான உபேந்திரா வை  திருமணம் செய்து கொண்டு பிரியங்கா உபேந்திராவாக மாறினார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

பிரியங்கா நடிப்பில் லோஹித்  இயக்கத்தில் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாரர் படம் மம்மி (கன்னடம்), சின்னாரி (தெலுங்கு). இப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் ஜோதிகா நடிப்பார் என்று கூட முன்பு பேசப்பட்டது.

இன்று ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தன ட்விட்டரில், உங்களை மிரட்ட விரைவில் வருகிறது டீஸர் என்று  போஸ்டரை  ஷேர் செய்துள்ளார்.

அநேகமாக இப்படம் தமிழில் டப்பிங் வடிவில் வெளிவரும் என்று தோன்றுகிறது, எனினும் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.