நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த சோலையில் அவரது நெஞ்சில் படும்படியாக அந்த ராயல் பெங்கால் புலி வரையப்பட்டிருந்தது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுமார் அரை கிலோ மிட்டர் நீள உடை ஒன்றை அணிந்து சமூகவலைத்தளங்களின் கிண்டலுக்கு ஆளானார். இந்த நிலையில் தன் மீதான இமேஜை உடைக்கும் வகையில் நேற்று ஜிம்பாவேவில் நடந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் உடையணிந்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

ஐநா குழந்தைகள் நிதியகத்தின் சர்வதேச நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் பிரியங்கா சோப்ரா நேற்றைய நிகழ்ச்சியின்போது கருப்புநிற சேலையும், கை வேலைகளாலான புலிகள் இடம்பெற்ற ரவிக்கையும் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த புலி, இந்தியாவின் தேசிய விலங்கை குறிப்பிடுகிறதாம். அந்த புலி சரியாக பிரியங்காவின் நெஞ்சுக்கு நேராக அமைந்து கம்பீரமாக காணப்பட்டது.

இந்த உடை குறித்து வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி கூறியபோது, ‘இந்த ஆடை இந்திய தேசிய விலங்கான ‘புலி’யை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சுந்தர்பன் சாரீஸ்’ என்றழைக்கப்படும் இந்த சேலையில் கை வேலைகளால் புலி வரையப்பட்டுள்ளது. இதில் இருக்கும் புலி- ராயல் பெங்கால் டைகர் வகையைச் சார்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.