Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரியங்கா, ராஜு பாய்க்கு ஸ்கெட்ச் போட்ட போட்டியாளர்கள்.. அதிரடியாக வெளிவந்த நாமினேஷன் லிஸ்ட்

priyanka-raaju-baai

Videos | வீடியோக்கள்

பிரியங்கா, ராஜு பாய்க்கு ஸ்கெட்ச் போட்ட போட்டியாளர்கள்.. அதிரடியாக வெளிவந்த நாமினேஷன் லிஸ்ட்

பிக் பாஸ் சீசன் 5 இல் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். இது சுருதி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுருதி வெளியேற்றபட்டதற்கு தாமரை இடமிருந்து எடுத்த காயின் தான் காரணம் என பலரும் பேசிவருகிறார்கள்.

மிகத்திறமையான போட்டியாளர் சுருதி முதல் ஐந்து வாரத்துக்கு உள்ளே வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவிக்கிறார்கள். இன்று திங்கட்கிழமை என்பதால் கன்பஷன் ரூமில் போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்கிறார்கள்.

இந்த வாரம் பிரியங்கா, ராஜுவை வெளியேற்ற போட்டியாளர்கள் குறி வைத்து உள்ளார்கள். இந்த வாரம் பிரியங்கா, பாவனி, அபிநய், நிரூப், அக்ஷரா ஆகியோர் ராஜுவை நாமினேட் செய்கிறார்கள். ராஜு மற்றும் அண்ணாச்சி, பிரியங்காவை நாமினேட் செய்கிறார்கள். இதனால் இந்த வார பிக்பாஸ் மிகவும் எதிர்பார்ப்புடன் செல்லும்.

விஜய் டிவி பிரபலங்களான பிரியங்கா மற்றும் ராஜு நாமினேட் செய்யப்பட்டாலும் மக்கள் இவர்களை காப்பாற்றி விடுவார்கள். மக்கள் இவர்களுக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பிரியங்கா, ராஜீவை விஜய் டிவி எலிமினேட் செய்யாது என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் இனிவரும் சண்டைகளும், போட்டிகளும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top