சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

தாமரையை பகடைக்காயாக உருட்டும் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் வில்லத்தனமாக விளையாடும் அந்த நபர்

விஜய் டிவிகள் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் சண்டை சச்சரவிற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் லுக்சுரி பட்ஜெட்டிற்காக வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, செய்தி வாசிப்பாளர்கள் ஆக பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு தெரியாத தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அந்த டாஸ்க்கில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக பிரியங்கா அவர்களது அணிகளுடன் சேர்ந்து தாமரையை வைத்து பிராங்க் செய்தனர். ஆனால் இதனை தெரிந்து கொள்ளாத தாமரை, அவர்கள் செய்ததை தாங்கமுடியாமல் வழக்கம்போல் கத்திக் கூச்சலிட்டார்.

அதிலும் குறிப்பாக பிரியங்கா, தாமரை மற்றவர்களிடம் பாசமாக பேசுவதை கிண்டல் அடித்ததும் தாமரைக்கு வெறியேறிவிட்டது. அதன்பிறகு இதெல்லாம் டாக்கிற்க்காக நடத்தப்பட்ட நாடகம் எனத் தெரிந்ததும் தாமரையுடன் இருந்த ராஜு, இமான், அக்ஷரா உள்ளிட்டோர் இவ்வாறு செய்வது சரி இல்லை என்று வாதிட்டார்.

ஆனால் நடுவராக இருக்கும் சஞ்சீவ் தாமரையை டாஸ்க்கிற்காக செய்வது தவறல்ல என்று கூறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரியங்கா தாமரையின் பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்தி விளையாடுவதை கடந்த சில நாட்களாகவே செய்துகொண்டிருக்கிறார்.

இருப்பினும் சில சமயத்தில் தாமரை விளையாட்டை நன்றாக புரிந்துகொண்டு விளையாடாமல் சட்டென்று கோபப்படுவது இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அவருக்கு ஆபத்தாக அமையும்.

ஒவ்வொரு வார இறுதி நாள் அன்று பேசுபொருளாக மாறிவரும் தாமரை இந்த வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நிச்சயம் பிரியங்காவிற்கு செம டோஸ் விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News