அடேங்கப்பா.! ஒரு எபிஸோடு-க்கு இவ்வளவு சம்பளமா.? ப்ரியங்காவை விட கம்மியா வாங்கும் மணிமேகலை

சின்னத்திரையில் ஃபேமஸான தொகுப்பாளினிகளாக வலம் வருபவர்கள் பிரியங்கா. இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் சமீப காலமாக மக்கள் இவர் மீது எந்த அளவுக்கு வெறுப்போடு இருக்கின்றனர் என்றும் பார்க்க முடிகிறது. பிரியங்கா மணிமேகலை பஞ்சாயத்தை தொடர்ந்து, இவர்கள் ரசிகர்கள் இவர்களை விட மோதி கொள்கின்றனர்.

சின்னத்திரையில் உள்ள ஒரு சிலர் மக்களின் favourite-ஆக மாறி வருகின்றனர். உதாரணத்திற்கு, பெப்சி உமா, சிவகார்த்திகேயன், கோபிநாத் என பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் அவர்.

ஆனால் அவரையே பிரியங்கா ஷோ பண்ண விடவில்லை என்றெல்லாம், ஆளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தார்கள். தற்போது, விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பிரியங்கா தேஷ்பாண்டே தான் உள்ளார். தனது கலகலப்பான பேச்சு, கவுண்ட்டர்கள் என தனது திறமையை கொண்டு தனக்கென தனி இடத்தை சின்னத்திரையில் பிடித்திருக்கிறார் அவர்.

அதிலும் மாகாபா ஆனந்த், பிரியங்காவின் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். குக் வித் கோமாளி சீசன் 5 வெற்றியாளர் பிரியங்கா என்ற தகவல் ஒரு பக்கம் வெளியாக, மற்றொரு பக்கம் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எது எப்படியாக இருந்தாலும், பிரியங்கா குக் வித் கோமாளியின் ஒரு ஷோ க்கு வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது பலரை ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது. வெளியான தகவலின் படி, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு ஷோவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சரி அப்போ மணிமேகலை என்ன வாங்குகிறார்? இவரை விட கூடவா இல்லை குறைவாகவா? என்று பல கேள்விகள் எழுகிறது. மணிமேகலை ஒரு எபிசோடு-க்கு 80,000 முதல் 1 லட்சம் வாங்குகிறார். மேலும் குக் வித் கோமாளி தவிர, மற்ற ஷோகளுக்கு பிரியங்கா 2 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும், மணிமேகலை 60,000 முதல் 80,000 வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பள வித்தியாசத்தினால் கூட இந்த சண்டை வந்திருக்கலாம் என்றும் இதை கேட்டு சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News