விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. இவருடைய தோற்றமும் மற்றும் நகைச்சுவை பேச்சும் ரசிகர்களை கவர்ந்ததால் தொகுப்பாளராக தற்போது வரை கலக்கி கொண்டு வருகிறார்.
பிரியங்கா பொறுத்தவரை எப்போதும் சாப்பாட்டு ராமன் என்பதை அவரே பல முறை கூறியுள்ளார். அதிலும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கூட பல பிரபலங்களும் பிரியங்கா எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் என்ற உண்மையை நகைச்சுவையாக பேசி வெளிப்படுத்தி விடுவார்கள்.
பிரியங்காவும் அதனை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு ஆமாம் நான் ஒரு சாப்பாட்டு பிரியன் என்பதை பலமுறை பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். தற்போது இவருக்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது பிரியங்கா ரைஸ் மற்றும் பிரியாணி இரண்டும் ஒன்றாக சாப்பிட்டதால் தற்போது வயிற்றுப்போக்கு போவதாக அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் 1 முறை 2 முறை இல்லை 15 முறை என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை சோகமாக கூறுவார்கள். ஆனால் பிரியங்கா அதனை நகைச்சுவையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் இன்று அவர் வீடு திரும்புகிறார். சாப்பாடு குறைத்துக் கொள்ளுமாறு மீண்டும் எழுந்து வாருங்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.