fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸை வறுத்தெடுக்கும் பிரியங்கா.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஸ்டைல்

priyanka deshpande

Videos | வீடியோக்கள்

பிக்பாஸை வறுத்தெடுக்கும் பிரியங்கா.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஸ்டைல்

பிக்பாஸ் 5-ல் நமக்கு நல்லா பழக்கமான முகம் நம்ம பிரியங்கா, சுருக்கமா சொல்லணும்னா நம்ம விஜய் டிவியோட செல்லப்பிள்ளை. அதனாலயோ என்னமோ பிரியங்காவோட அலப்பறை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.

நேற்று எபிசோட்ல பிரியங்கா பிக்பாஸ செமயா கலாய்ச்சு விட்டுருச்சு. இவங்க நேற்று பேசுனது வைத்து பார்க்கும்போது பிக்பாஸ்-5 டைட்டில் வின் பண்ண வந்த மாதிரி தெரியல பிக்பாஸ வைச்சு செய்யறதுக்கு பல நாளா பிளான் போட்ட மாதிரி தெரியுது.

சம்பவம் என்னன்னா சின்னபொண்ணு அக்காவோட நைட்டியை கானோம். அதனால கடுப்பான பிரியங்கா கேமரா முன்னாடி போய் நின்னு பிக்பாஸ் கிட்ட பேசுறதா நினைச்சு, யோவ் பெருசு வயசுக்கு ஏத்த மாதிரியாபண்ற, பெருசு ரொம்ப தப்பு நைட்டிய எடுத்து ஒளிச்சு வச்சு இருக்கியேனு ஆரம்பிச்சாங்க. இதையல்லாம் சின்ன பொண்ணு அக்கா கண்ணுல ஒரு பீதியோட பார்த்துகிட்டு இருந்தாங்க.

அதோடு நிறுத்தாமல் சின்ன சட்டியா கொடுத்து இவ்வளவு சமைக்கச் சொல்றியே எப்படி சமைக்கிறது எல்லாரும் சோறு போடலன்னு எங்கள நாமினேட் பண்ண வைக்க பிளான் பண்றியா, அதெல்லாம் நடக்கவே நடக்காது என்றும் பாத்ரூம்ல இருக்கிற பக்கெட் வச்சு சமைப்போம் என்று கூறினார்.

வாரக்கடைசியில் போட்டியாளர்களுக்கு பஞ்சாயத்து பண்ணும் நம்ம ஆண்டவர் இந்த வாரம் பிக்பாஸ்க்கே பஞ்சாயத்து பண்ண வேண்டி இருக்கும் போல.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top