fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அபிஷேக் இடத்தை பிடிக்கும் தாமரை.. பற்றி எரியும் பிக்பாஸ் வீடு

Biggboss5

Videos | வீடியோக்கள்

அபிஷேக் இடத்தை பிடிக்கும் தாமரை.. பற்றி எரியும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் காண டாஸ்க் நடைபெறுகிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இரண்டு அணிகளாக பிரிகின்றனர். அதில் ஒன்று ரெட் டிவி அணி மற்றொன்று ப்ளூ டிவி அணி.

பிரபல சேனல்கள் சர்ச்சைக்குரிய பிரபலங்களை கூப்பிட்டு விவாதம் நடத்தும் நிகழ்ச்சியை போல பிக்பாஸ் வீட்டிலும் நடக்கிறது. அப்போது பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் காரசாரமான விவாதம் ஏற்படுகிறது.

அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிரியங்கா போட்டியாளர்களிடம் இந்த வீட்டில் சில பேர் ஒன்னு பண்றாங்க ஆனா பின்னாடி வேற மாதிரி பேசுவாங்க என்று சொல்கிறார். பிரியங்கா யாரைப் பற்றி சொல்கிறார் என்று கூறும் முன்பே தாமரை பிரியங்காவிடம் சண்டைக்கு செல்கிறார்.

நீ வந்து சிண்டு முடிந்து பேசுவதிலேயே குறியாக இருக்குற, பரவால்ல ரொம்ப நல்லா பண்ற என்று நக்கலாக சொல்கிறார். அதற்கு பிரியங்கா அதை நீதான் செய்கிறாய் என்று கத்துகிறார். ஆனால் அவர்கள் சண்டையை ஹவுஸ் மேட்ஸ் யாரும் கண்டு கொள்ளாமல் அவரவர் வேலையை பார்க்கின்றனர்.

நான் நியாயத்தை தானே பேசுகிறேன் என்று தாமரை அடிக்கடி சொல்கிறார். ஆனால் அவர் பேசுவது நியாயம்தான் என்று ஒருவரும் கூறாமல் இருப்பதிலேயே அவருக்கு புரிந்திருக்க வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் பழி உணர்வோடு இருக்கும் தாமரை எப்பொழுது தான் திருந்த போகிறார்.

பிரியங்கா சொல்வதைப் போல வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தாமரை, பிரியங்காவை பற்றி குறை கூறிக் கொண்டு தான் இருக்கிறார். இருவரும் 5 நிமிடம் சேர்ந்து உட்கார்ந்து பேசினால் பிரச்சினை முடிந்து விடும். ஆனால் தாமரை பிரியங்காவுடன் சண்டை போட்டால் தான் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்று கண்ணோட்டத்துடனேயே இருக்கிறார்.

ஆரம்பத்தில் அபிஷேக், பிரியங்காவுடன் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சில வேலைகள் செய்தது போல தற்போது தாமரையும் செய்து வருகிறார்.இதை வைத்து மக்களின் ஓட்டை வாங்கலாம் என்று நினைக்கும் தாமரையின் கணிப்பு எந்த அளவுக்கு சரியானது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top