fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவித்தது ப்ரியங்கா சோப்ராவின் மியாமி பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ். கூடவே சர்ச்சையையும் கிளப்புது சிகரெட் பிடிக்கும் போட்டோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் குவித்தது ப்ரியங்கா சோப்ராவின் மியாமி பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ். கூடவே சர்ச்சையையும் கிளப்புது சிகரெட் பிடிக்கும் போட்டோ.

பிரியங்கா சோப்ரா பாலிவுட் டு ஹாலிவுட் மாறிவிட்டார் என்றால் அது மிகையாகாது. குவான்டிகோ தொடர், பேவாட்ச் என வேற லெவல் . மேலும் தன் பாய் பிரெண்ட் நிக் ஜோனாஸ் அவர்களை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 18 இவரின் (37 வயது ) பிறந்தநாள். எனவே இவர் கணவர் மியாமி நகரில் மினி வெகேஷன் ஏற்பாடு செய்து அசத்தினார். அசத்தலான கேக் கட்டிங் நிகழ்ந்தது. பின்னர் சொகுசு கப்பல், பீச், ஸ்விம்மிங், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என சூப்பர் ஹாட்டாக அசத்திய இந்த ஜோடி.

எனினும் செலிபிரிட்டி என்றாலே சர்ச்சை இல்லாமலா, ஒரு போட்டோவில் பிரியங்கா சிகரெட், அவரது அம்மா கணவர் நிக் மற்றும் அம்மா மது சர்மா சிகார் பிடிக்கும் போட்டோவும் வைரலானது.

madhu sharma priyanka chopra nick jonas

ஏற்கனவே தான் ஆஸ்துமா நோயாளி என பதிவிட்டார், தற்பொழுது சிகரெட் பிடிப்பதால் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். இது முதல் முறை கிடையாது, தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு, தன் திருமணத்தில் இவர் பட்டாசுடன் பட்டயகிளப்பியது அப்பொழுதைய சர்ச்சை.

செலிப்ரட்டிகள் பொறுத்தவரை ஊருக்கு தான் உபதேசம். தனக்கு என்று வரும் பொழுது அவர் அவரின் சந்தோசம் தான் முக்கியம் போல.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top