தமிழில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகி, தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் அழகே அவரது உதடு தான்.

என்ன தான் இவர் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், தனது அம்மா மற்றும் பாட்டி கூறிய சில அழகு குறிப்புக்களையும் தவறாமல் பின்பற்றுவாராம்.

Image Courtesy

இக்கட்டுரையில் பிரியங்கா சோப்ரா தனது அழகின் ரகசியமாக கூறும் மூன்று அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உதடு ஸ்கரப்

உதட்டில் உள்ள கருமை மற்றும் இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி, உதட்டின் அழகு மற்றும் மென்மைத்தன்மையை அதிகரிக்க, அடிக்கடி உதட்டிற்கு ஸ்கரப் பயன்படுத்த வேண்டும். நம்ம பிரியங்கா சோப்ராவின் அழகிய உதட்டிற்கு காரணமான அந்த உதடு ஸ்கரப் என்னவென்று பார்ப்போமா…

அதிகம் படித்தவை:  விவசாயி கெட்-அப்பில் உதயநிதி ஸ்டாலின்- கண்ணே கலைமானே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

செய்முறை:

ஒரு பௌலில் சிறிது உப்பை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது வெஜிடேபிள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உதட்டைக் கழுவ வேண்டும்.

பாடி ஸ்கரப்

அடுத்ததாக, சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கவும், சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்ள உதவும் பாடி ஸ்கரப் குறித்து காண்போம்.

செய்முறை:

ஒரு பௌலில் தேவையான அளவு கடலை மாவை எடுத்துக் கொண்டு, பின் அத்துடன் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவை சற்று கெட்டியாக இருந்தால், சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கையின் ஒரு சிறு பகுதியில் தேய்த்து நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது எவ்வித அலர்ஜியும் இல்லாவிட்டால், உடல் முழுவதும் இந்த ஸ்கரப்பை பயன்படுத்தலாம்.

அதிகம் படித்தவை:  காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?

ஹேர் மாஸ்க்

தலைச் சருமம் மிகவும் வறட்சியுடனோ, பொடுகு அதிகமாகவோ இருந்தால், பிரியங்கா சோப்ரா கூறும் இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள்.

செய்முறை:

ஒரு பௌலில் தயிரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் கழித்து, பேபி ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.