fbpx
Connect with us

Cinemapettai

பிரியங்கா அதில் கணக்கச்சிதம் – ஹாலிவுட் நடிகர் புகழாரம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியங்கா அதில் கணக்கச்சிதம் – ஹாலிவுட் நடிகர் புகழாரம்

 

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். ‘குவாண்டிகோ’ டிவி தொடரில் நடித்து ஹாலிவுட் ரசிகர்கள் விரும்பும் கதாநாயகியாக மாறியுள்ளார்.

இந்த நிலையில், பிரியங்கா நடித்து இருக்கும் முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இப் படத்தில் ஹாலிவுட் நடிகர் டுவெயன் ஜான்சன் கதாநாயகனாகவும், பிரியங்கா விக்டோரியா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் முதல் படத்திலேயே வில்லியாக நடித்துள்ள பிரியங்காவின் துணிச்சலை பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் டுவெயின் ஜான்சன் பிரியங்கா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து கூறியிருப்பதாவது:

அழகும், குறும்புத்தனமும் ஒன்று சேர்ந்து, கொடூரமான கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சிரமமான காரியம். ஆனால் ‘பேவாட்ச்’ படத்தில் அதுமாதிரி ரோலுக்கு பிரியங்கா கணக்கச்சிதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான ‘பேவாட்ச்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top