priyanka chopra

நம்ம இளைய தளபதி விஜய் கூட தமிழன் படத்துல ஹீரோயினாக நடிச்ச பிரியங்கா சோப்ரா அதுக்கப்றமா பாலிட்ல முன்னணி ஹீரோயினாக ஒரு பெரிய ரவுண்டு வந்தது நம்ம எல்லார்க்கும் தெரிஞ்ச விசயம்தாங்க.

தொலைகாட்சி சீரியல் மூலமா ஹாலிவுட்ல கால்பதிச்ச நம்ம பிரியங்கா இப்போ ஹாலிவுட் திரைப்படங்கள்ளையும் பெரிய ஹீரோயினா வளர்ந்துட்டு இருக்காங்க. கொஞ்ச நாட்கள் முன்னாடி இவுங்க நடிச்சு வெளியான Bay Watch திரைப்படம் வெற்றி பெறாத நிலையிலும் ஹாலிவுட்ல இவுங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுட்டுதாங்க இருக்கு.

அதுக்கு ஆதாரமா இப்போ இவங்க இரண்டு ஹாலிவுட் படங்கள்ல ஒப்பந்தமாகிருக்காங்க. அதுல ஒரு படம் ரொமான்டிக் காமெடினு சொல்லப்படுது. இந்த படத்துல முன்பு இல்லாத அளவுக்கு அதிக கவர்ச்சி காட்டப் போறாங்களாம்.

கொசுறு: Bay Watch திரைப்படம் வெளியாகும் முன்பு இந்த படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம்னு சொன்ன பிரியங்கா இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்துக்கு என்ன சொல்ல போறாங்களோ?