Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்கிரீம் சாப்பிட்டது ஒரு குத்தமா? மீண்டும் சர்ச்சையில் பிரியங்கா சோப்ரா
சமீபத்திய சர்ச்சை நாயகி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் பிரியங்கா சோப்ரா, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்சனையை பற்றி தன் பங்குக்கு வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இது நல்ல விஷயமாக இருந்தாலும் புகை பிடிக்கும் நீங்கள் அதைப் பற்றி கூறுவது தவறு என பதிலடி கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.
அமைதியாக இருந்த பிரியங்கா தற்போது 500 ரூபாய் நோட்டில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிட்டு புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். அதாவது 500 ரூபாய் நோட்டுகளை ஒரு குவளையினுல் சுற்றி அடுக்கி அதன் மீது ஐஸ் கிரீமை வைத்தபடி சாப்பிட்டுள்ளார். போதாக்குறைக்கு அதை போட்டோவும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் இந்தியாவில் தங்களிடம் அதிக பணம் இருக்கிறது என்பதற்காக 500 ரூபாய் நோட்டில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது கண்டிக்கதக்கது என விவாதித்து வருகின்றனர். இது இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பை அவமதிப்பு செய்வது போன்றதாகும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகையின் ஆதரவாளர்கள், அட! அது போலி 500 ரூபா என நடிகைக்கு சொம்படித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பல கலவரங்கள் நடந்துள்ளன.

priyanka-ice-cream
