பிரியங்காவா, மணிமேகலையா.? CWC 5ல் யாருக்கு அதிக சம்பளம்

CWC 5 : விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இப்போது எதிர்பாராத விதமாக இந்நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளினி மணிமேகலை வெளியேறி இருக்கிறார். அதுவும் பிரியங்காவின் இடையூறு காரணமாக வெளியேறி உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக பங்குபெற்று வந்த மணிமேகலைக்கு இந்த வருடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம் விஜய் டிவியின் தொகுப்பாளியாக இருந்து வந்த பிரியங்கா இந்த சீசன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

இதனாலையே அடிக்கடி பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் தன்மானம் தான் முக்கியம் என்று மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டதாக கூறினார். இந்த சூழலில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சம்பள விபரம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

CWC 5 நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் சம்பளம்

அதன்படி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு மணிமேகலை ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அதுவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் பிரியங்காவின் சம்பளம் 20 ஆயிரம் ஆகும். சுயமரியாதை வேண்டும் என்பதற்காக சம்பளத்தை பற்றி யோசிக்காமல் மணிமேகலை விலகி இருக்கிறார்.

மேலும் விஜய் டிவியில் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு 2 முதல் 2.5 இலட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம். சமையல் மீது உள்ள ஈடுபாடு காரணமாகத்தான் மிகக் குறைந்த சம்பளமாக இருந்தாலும் குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த வாரம் வையல் கார்டு என்ட்ரி நடக்க இருக்கிறது. அதன் பிறகு மிக விரைவில் பைனல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே இந்நிகழ்ச்சியின் பைனல் எபிசோடுகளை எடுத்து முடித்து விட்டதாகவும், பிரியங்கா தான் டைட்டில் வின்னர் என்றும் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

பிரளயத்தை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை

- Advertisement -spot_img

Trending News