Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவுக்கு மீண்டு(ம்) வரும் முத்தழகு.. இந்தவாட்டி வேற மாதிரி
முத்தழகை அவ்வளவு எளிதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரியாமணி நடித்த முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். கடைசியாக 2012-ம் ஆண்டு வெளிவந்த சாருலதா படம் மூலம் சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு சென்ற பிரியாமணி, மீண்டும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் டாக்டர் 56 திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
இதனால் அவரது ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். கவர்ச்சி பொங்க பொங்க ஒரு காட்டு காட்டிவிட்டு சென்ற பிரியாமணி என்ற சூறாவளி சினிமாவுக்கு மீண்டும் திரும்புவதால், ஆங்காங்கே புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ஹீரோயின்களை ஒதுங்குமாறு அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
