Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல சாக்லேட் பாய்யுடன் இருந்த தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னணி நடிகை.. சீக்கிரமே கல்யாணமாம்!
தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியாமணி. அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.
மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாக வளர்ந்த தருணுடன் பிரியாமணியை இணைத்து சினிமா உலகில் பல வதந்திகள் பரவியது நாமறிந்ததே.
இந்த நிலையில் பிரியாமணி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தருணுடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது வைரலாக பரவி வருகிறது.
அதாவது பிரியாமணியும் தருணும் கடந்த 2005ஆம் ஆண்டு ‘நவ வசந்தம்’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியதிலிருந்தே இருவரும் காதலிப்பதாகவும், சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவின.
ஆனால் தற்போது பிரியாமணி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது பிரியாமணி அந்த பேட்டியில், ‘நவ வசந்தம் படம் தயாராகிக் கொண்டிருந்த போது நானும் தருணும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசப்பட்ட தகவல்களை நான் கேள்விப்பட்டேன்.
அதுமட்டுமில்லாமல் தருணின் அம்மா என்னிடம் வந்து, ‘இருவரும் காதலிக்கிறீர்களா? நீங்கள் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. உன்னுடைய விருப்பத்தை என்னிடம் சொல்’ என்று கேட்டார். அதற்கு முன்புவரை எங்கள் இருவரைப் பற்றி இவ்வாறு ஒரு வதந்தி பரவுவது எனக்கு தெரியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரியாமணி.
மேலும் பிரியாமணி ‘நடிகர் நடிகைகள் இடையே இவ்வாறு வதந்திகள் பரவுவது இயல்பு என்றாலும் நாங்கள் நடித்த முதல் படத்திலேயே எங்களைப் பற்றி இப்படி ஒரு வதந்தி பரவியது என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.

tarun-priyamani
தற்போது தான் ஒரு புரோடக்சன் கம்பனி ஆரம்பிக்க போகிறார் என்றும், தருண் தன்னுடைய அம்மாவின் தோழியின் மகளை மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
