Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரியாமணியுடன் காதல் கிசுகிசுக்களில் இருந்த பிரபல நடிகர்.. பார்க்க அம்மாஞ்சி மாதிரி இருந்தாரே, அவரா இப்படி!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. தமிழில் அது ஒரு கனாகாலம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் பருத்திவீரன் படத்தில் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு கமர்சியல் நாயகியாக வாழ ஆசைப்பட்டு கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்து பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறினார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டியும் பெரிய அளவில் ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி திருமணம் செய்துகொண்ட பிரியாமணி தற்போது தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார். அசுரன் பட தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரியாமணியின் பழைய காதல் கிசுகிசு ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் தருண்.
பிரபல தெலுங்கு நடிகரான இவர் தமிழில் சில படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தருண் மற்றும் பிரியாமணி இணைந்து நடித்த நவ வசந்தம் என்ற படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான செய்தியை தொடர்ந்து தருண் தாயார் நேரடியாகவே பிரியாமணியிடம் பெண் கேட்டு விட்டாராம்.
ஆனால் பிரியாமணி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறியும் நம்பவில்லையாம். பிறகு தருண் இருவரும் நண்பர்கள்தான் என்று கூறி பஞ்சாயத்து முடிந்த பிறகு பிரியாமணி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லையாம்.

tarun-priyamani-cinemapettai
