37 வருடங்களுக்கு முன்பே பாக்கியராஜ் படத்தில் நடித்துள்ள பிரியதர்ஷினி.. செம ஹிட்டான படம் ஆச்சே!

கே பாக்யராஜ் நடிப்பை தாண்டி இயக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.

1984-ல் பாக்யராஜ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தாவணிக்கனவுகள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். படத்தின் கதையின்படி 5  தங்கைகளையும் கல்யாணம் செய்து கொடுத்து கரை சேர்க்க வேண்டும்.

ஏழை குடும்பத்தில் பிறந்த கதாநாயகனை வைத்து மிக அற்புதமாக எடுத்து, நடித்துருப்பார் பாக்யராஜ். சிவாஜி மற்றும் பார்த்திபன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த படம்.

இந்த படத்தில் கடைக்குட்டி தங்கையாக விஜய் டிவியின் பிரபலமான திவ்யதர்ஷினி அக்கா பிரியதர்ஷினி நடித்திருப்பார். அதில் காமெடி கலந்த கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

priyadharshini
priyadharshini

தற்போது இதை அறிந்த ரசிகர்கள் பாக்கியராஜ் உடன் நடித்த பிரியதர்ஷினிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். பிரியதர்ஷினி நடனம், பாடுவது என்று அனைத்திலும் பட்டையை கிளப்புவார்.

ஆகையால் தற்போது கூட தர்ஷினி டான்ஸ் அகாடமி(DDA) என்ற நடன பள்ளியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -