டிடி அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா? நட்ட நடுகாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

பிரியதர்ஷினி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது வீட்டில் அனைவருமே தொகுப்பாளர்கள் ஆகவே பணியாற்றியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஆயிரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு என ரசிகர் பட்டாளமே உருவானது. முதன்முதலில் பொதிகை டிவியில் மெகாசீரியல் ஆன விழுதுகள் சீரியல் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

priyadharshini
priyadharshini

பிரியதர்ஷினி பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா என்பது பலருக்கும் தெரியாது இவர்கள் இருவருமே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். தமிழ் சினிமா அது மட்டும் இல்லாமல் தனித்தனியாக ஒரு சில படங்களிலும் நடித்துள்ளனர்.

தற்போது பிரியதர்ஷினி அவர் கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.