Connect with us
Cinemapettai

Cinemapettai

priya-varrier

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓணம் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்.. ஆணழகன் பிரசாந்த், வையாபுரி உடன் ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவார்கள் என்ற சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா. இருக்கணும். அப்படி ஒரே ஒரு ராத்திரியில் உலக ஃபேமஸ் ஆனவர்தான் பிரியா வாரியர்(Priya Prakash Varrier).

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கண்ணடிக்கும் காட்சியின் மூலம் ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்களை பெற்றார்.

இதனைப் பயன்படுத்தி படவாய்ப்புகளை பெற்று சினிமாவிலும் நடித்து வந்தார். அந்த ஒரே ஒரு காட்சிக்கு இருந்த வரவேற்பு அந்த படத்திற்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தாலும் நாளுக்கு நாள் பிரியாவாரியரை கலாய்க்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

ஹிந்தியில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தார். ஆனால் அந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து பிரியா வாரியர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதை குறிப்பிட்ட நபருடன் வைத்து மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் நம்ம நெட்டிசன்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். பார்ப்பதற்கே அந்த புகைப்படம் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தில் தான் இருந்தது. இதைக்கண்ட நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா.

வழக்கம்போல் தமிழ் சினிமாவில் பெண் வேடம் போட்ட ஆண் நடிகர்களுடன் அந்த புகைப்படத்தை ஒப்பிட்டுப் கலாய்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆணழகன் படத்தில் பிரசாந்த் போட்ட பெண் வேடத்தையும், காமெடி நடிகர் வையாபுரி பெண் வேடம் போட்ட புகைப்படத்தையும் சேர்த்து வச்சு செய்து வருகின்றனர்.

priya-varrier-memes

priya-varrier-memes

Continue Reading
To Top