Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவின் படத்தை இழந்த ப்ரியா வாரியர்.. காரணம் இதுதானாம்
கண்ணழகி ப்ரியா வாரியர், கோலிவுட்டில் நடிக்க இருந்த சூர்யாவின் பட வாய்ப்பை இழந்ததன் காரணம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மலையாள மங்கைகள் தமிழில் வைரல் ஆவது தொடர்கதையாகி விட்டது. கடந்த வருடம் ஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடிய ஷரில் பலருக்கு தேவதையாகவே மாறினார். இதை தொடர்ந்து, ஒரு அடார் லவ் மலையாள படத்தின் ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்டது. அதில், நாயகி ப்ரியா வாரியரின் சில நொடி கண்ணசைவுகளால் சமூக வலைத்தளமே ஸ்தம்பித்தது.
அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஆர்மி தொடங்கப்பட்டது. இன்று வரை ப்ரியா வாரியர் மீது இருக்கும் க்ரேஸ் குறையவில்லை. அவர் வைரலான ஒரே நாளில் அவரின் இன்ஸ்டா பக்கம் சில மில்லியனை தாண்டியது.
மலையாள நடிகைகளுக்கு தமிழில் பெரிய இடம் எப்போதோ உருவாகி விட்டது. இதனால், நம் தமிழ் இயக்குனர்கள் பலர் ப்ரியா வாரியரை தமிழுக்கு அழைத்து வர கதைகள் சொல்லினர். ஆனால், எல்லாருக்குமே அப்புறம் பார்க்கலாம். தற்போது முடியாது என சொல்லி அனுப்பி இருக்கிறார். இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா படமும் ஒன்று.
தமிழ், மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என எந்த படத்திலும் அவரால் ஒப்பந்தமாக முடியவில்லை. இதற்கு ப்ரியா வாரியர் தரப்பில் தற்போது கல்லூரியில் படித்து வருவதால் படிப்பை பாதிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு அடார் லவ் படத்தின் வெளியீடு வரை ப்ரியா வாரியர் எந்த படத்திலும் கமிட்டாக கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம். இதனால், வரும் நல்ல வாய்ப்பை கூட வேண்டாம் என சொல்லும் நிலைமைக்கு தள்ளிப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஓமார் லாலு ஒரு அடார் லவ் படத்தை இயக்கி வருகிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போ, ப்ரியா இந்த வருட இறுதியிலே புதுப்பட அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
