priya

ஒரே ப்ரோமோ பாடல் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்த ப்ரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

priya
priya

மலையாள மங்கைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரின் தூக்கத்தை கெடுப்பது வழக்கமாகி விட்டது. இவர்களுக்கு மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் ராணியாகவும் இருந்து வருகின்றனர். ஜிமிக்கல் கம்மல் பாடலின் ஒரிஜினல் வெர்சனையே தூக்கி சாப்பிடும் அளவு பேராசிரியைகள் ஆடின ஆட்டம் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்தது. இதில், முதல் வரிசையில் இருந்த ஷெரிலுக்கு ஆர்மியே உருவானது. இவரின் காற்று அடித்து முடித்ததும் உருவாகிய அடுத்த ஆள் தான் ப்ரியா வாரியர். சில நொடி வீடியோவில் அவரின் புருவ அசைவுகள் அனைவரையும் கவர்ந்தது. ஒரே நாளில் இன்ஸ்டா பாலோயர்கள் மில்லியனை தாண்டினார். பிறகென்ன, சமூக வலைத்தளம் முழுவதும் ப்ரியா வாரியர் புராணமே நிலவியது.

ஒரு அடார் லவ் படம் மூலம் மலையாள உலகில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஓமர் லுலு இயக்கி வருகிறார். படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘மணிக்கய மலரே’ பாடல் பல வரவேற்புகளை பெற்றது. அதைப்போல, நீதிமன்றம் வரை ப்ரியா வாரியருக்கு எதிராக கேஸ் போடப்பட்டது. ஆனால், அதையெல்லாம் தடையாக கருதி படக்குழு உடைத்தெறிந்தது. இதை தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அளவில் புகழ் பெற்ற ப்ரியாவிற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். ஆனால், ஒரு அடார் லவ் இயக்குனர் இப்படம் முடியும் வரை வேறு வாய்ப்புகளை ஒப்புக்கொள்ள கூடாது என உத்தரவிட்டு இருப்பதால் எல்லா இயக்குனருக்கும் நோ மட்டுமே சொல்லும் நிலைக்கு ப்ரியா வாரியர் தள்ளப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பட்ட படிப்பும் காரணமாக சொல்லப்படுகிறது.

priya
priya

இந்நிலையில், பிரியா வாரியரின் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. கிரேட் கல்விமுறையில் பயின்ற ப்ரியா வாரியர், சமஸ்கிருதத்தில் 80 மதிப்பெண், ஆங்கிலத்தில் 87, கணினி அறிவியல் 97, பொருளாதாரத்தில் 79, கணக்கு பதிவியலில் 76 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இத்தகவலை ப்ரியா வாரியர் இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.