ப்ரியா பிரகாஷ் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் திரிச்சூர் என்ற மாவட்டத்தில் உள்ள பூனைகுன்னம் என்ற ஊரில் பிறந்தார் , இவருக்கு தற்பொழுது வயது 18 தான் ஆகிறது இவர் தற்பொழுது B.com முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவரின் குடும்பம் கேரளாவில் ஒரு பாரம்பரிய குடும்பம் ஆகும், தற்பொழுது கல்லூரியில் படித்து வரும் ப்ரியா மலையாள சினிமாவில் ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த படத்தில் மாணிக்கைய மலராய பூவி என்ற பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இந்த பாடலில் வெறும் 10நொடிகளே வருகிறார் ப்ரியா ஆனால் அந்த நொடியில் ஆளையே புரட்டி பொட்டு இதையத்தை கொள்ளை கொள்ளும் சில கண் அசைவுகளை கொடுப்பார்.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இதன் விளைவாய் சில 100 பாலோவர்ஸ் இருந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தற்பொழுது 11 லட்சம் பாலோவர்ஸ் சென்றுள்ளது. இவையெல்லாம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்ததால் வந்த விளைவு. அவர்கள் கொஞ்சம் தூக்கி விட இந்தியா முழுவதும் பிரபல மாகிவிட்டார்.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

தற்போது அவரின் வயது 18 தான் ஆனால் அவருக்கு அபிலாஷ் நந்தன் என்ற காதலன் இருக்கிறார்.இண்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரே நாளில் அதிக பாலோவர்களை தனது பக்கம் சுண்டி இழுத்த பிரபலங்களில் அமெரிக்க நடிகை கெய்லி ஜென்னர்- 8.6 லட்சம் கால்பந்து வீரர் ரொனால்டோ-6.5 லட்சம் ஆகிய இருவருக்கும் அடுத்தாக 6 லட்சம் பாலோவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் நம்ம ப்ரியா.

பிரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் , தற்போது அந்த லிஸ்டில் ப்ரியா பிரகாஷ் என வருடத்திற்கு ஒருமுறை சார்ஜிக்கள் ஸ்ட்ரைக் நடத்தி தமிழக இளைஞர்களை பாடாய் படுத்துகிறது கேரள திரையுலகம்.பொறுத்திருந்து பார்க்கலாம் எந்த அளவிற்கு உயரம் தொடுவார் என.