செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய் சேதுபதி தான் Safe Game ஆடுறாரு.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரியாமான நடிகை

பிக் பாஸ் சீசன் 8, ஆரம்பித்த முதல் நாளை தவிர, சுவாரசியம் கொஞ்சம் கூட இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் கமலை மிஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது இந்த வாரம் ரியா வெளியேறி உள்ளார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி, தனது வழக்கமான பாணியில் ரோஸ்ட் செய்யாமல், கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். அதற்க்கு காரணம், நெட்டிசன்கள். இவர் பேசவே விட மாட்டிங்குறார் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் சுதாரித்துக்கொண்ட விஜய சேதுபதி, contestants சொல்லுவதை பொறுமையாக கேட்டு பதிலளித்து வருகிறார்.

லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரியா ராமன்

வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக 6 பேர் நிகழ்ச்சியின் என்ட்ரி கொடுத்திருந்தனர். கடந்த வாரத்தில் இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களால் நிகழ்ச்சியில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை என்று சாட்டை அடித்தார். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மொட்டை கடுதாசி தேவை என்றும் அவர் கூறியிருந்தார்.

தற்போது இவருக்கே ஒரு மொட்டை கடுதாசி தேவை என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை பிரியா ராமன். சமீபத்தில் ஸ்கூல் டாஸ்க் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகர் ரஞ்சித்தின் மனைவியும் பிரபல நடிகைமான பிரியா ராமன் நிகழ்ச்சி குறித்து பல விஷயங்களை கூறும்போது, விஜய் சேதுபதியையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் பிரியா ராமன்.

விஜய் சேதுபதி தான் Safe Game ஆடுகிறார். உண்மையில், அவருக்கு தான் மொட்டை கடுதாசி தேவை படுகிறது. விஜய் சேதுபதியின் ஹோஸ்டிங்கை நான் ரசிக்கிறேன், ஆனால் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லித்தான் ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வளவு தான் அடுத்த வாரம் சிறப்பான முறையில் ரஞ்சித்திடம் சொல்லவேண்டியதை சொல்லிவிடுவார். உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தீர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News