Connect with us
Cinemapettai

Cinemapettai

திடீரென்று பிரபலமான பிரியா வாரியர் தற்போதைய நிலை.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சே

priya-varrior

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென்று பிரபலமான பிரியா வாரியர் தற்போதைய நிலை.. கடைசியில் இப்படி ஆகிப்போச்சே

கண்ணடிக்கும் காட்சி மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர் தற்போது சினிமாவில் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

கண் அடிக்கும் காட்சி மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். அதன் பிறகு இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு ஆதார் லவ் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு எந்த படங்களும் இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை.

இதனால் ரசிகர்கள் இவர் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தற்போதும் பிரியா வாரியர் ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். நடிகையாக சினிமாவுக்குள் வந்த இவர் தற்போது பைனல் எனும் மலையாளப் படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதன் மூலம் பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.

இதன் மூலம் பல படங்களுக்கு பாடல்களை பாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகளும் இல்லையாம் அதனால் முழுநேர பாடகியாக இருக்க முடிவு செய்துள்ளார் என கூறுகின்றனர். எப்படியோ சினிமாவில் இவர் கதாநாயகியாக வெற்றி பெறுவாரா இல்லை பாடகியாக வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

priya varrier singer

priya varrier singer

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top