கேரளாவில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டியின் பொழுது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பிரியா பிரகாஷ் வாரியர்

18 வயது தான் ஆகிறது. இவர் நடிப்பில் இன்னமும் முதல் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என்பது தான் கூடுதல் சிறப்பு.

Priya P Varrier

“ஒரு ஆதார் லவ்” என்ற படத்தில் உள்ள “மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய வீடியோ கிளிப் மூலமாக பிரபலமானார் . வாலெண்டைன்ஸ் வாரம் முழுவதும் இளசுகளிடம் இவரின் பாடல் தான் ட்ரெண்டிங் .

Be you♥ Pc: @ajmal_photography_

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

சமூகவலைத்தளங்களான பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம்மில் ஏக டிமாண்ட் ஆகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் 4 . 9 மில்லியன் வியூர்ஸ் உள்ளனர். ஸ்போர்ட்ஸில் ரொனால்டோ, ஹாலிவுட்டில் டாம் கிருஸ், மாலிவூடில் துல்கர் சல்மான் கூட கணக்கு ஆரம்பித்த ஒரு நாளில் இவ்வளவு பெயர் பின் தொடர்ந்தது கிடையாதாம்.

இந்நிலையில் இவர் கால்பந்தாட்ட மைதானத்தில் இருந்து போட்டோவுடன் ட்வீட் ஒன்றை டீவீட்டினார். ” லெஜெண்ட் சச்சின் இங்கு உள்ளார் ” என்று.

Sachin ISL

சச்சின் டெண்டுல்கர்

நம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் தான் ஐ எஸ் ல் போட்டியில் பங்கேற்கும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர். சென்னை அணி மற்றும் கேரளா மோதும் போட்டியை காணவும், அணியை உற்சாக படுத்தவும் இவர் வந்திருந்தார். சச்சின் ஸ்பெசாலிட்டி வி ஐ பி பாக்ஸில் அமர்ந்து மேட்ச் பார்த்துள்ளார். மேலும் ப்ரியாவும், படத்தில் அவர் ஜோடி ரஹ்மானும் அதே பாக்ஸில் பின் ரோவில் அமர்ந்துள்ளனர்.

KERALA BALASTERS FC

மேட்ச் முடிந்த பின் சச்சின் கேரளா அணியின் ஜெர்ஸி ஒன்றை நினைவு பரிசாகவும் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவை பிரியா தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இதுவே வைரலாகி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here