உடலை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய ப்ரியா பவானி சங்கர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்துள்ள நடிகைகளில் மிக முக்கியமானவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கி பின்னர் சீரியல்கள் மூலம் பிரபலமானவர்.

தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.

இஷ்டத்திற்கு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முடித்து விடுகிறார். மேலும் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கரின் உடல் தோற்றமும் வசீகரமான அழகும் தான் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதனாலேயே அவருக்கு சினிமாவிலும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து முன்னணி நடிகையாக்கி உள்ளனர்.

ஆனால் தற்போது அந்த ரசிகர்களிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

மேடம், யாரை கேட்டு உடல் எடையை குறைச்சீங்க என அவரிடம் உரிமையாக சண்டை போடும் அளவுக்கு தங்களுடைய வருத்தங்களை அவருடைய கமெண்ட் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

priya-bhavani-shankar-cinemapettai-01
priya-bhavani-shankar-cinemapettai-01