Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த பணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. கோடிகளில் விளையாடும் பிரியா பவானி சங்கர்
ஒரு சீரியல் நடிகைக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய வரவேற்பா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேயாத மான், மான்ஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரியாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
இதனால் தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, வான், இந்தியன் 2, அகம்பிரம்மாஸ்மி போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக காத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு படத்திற்கு 40-50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் ப்ரியா பவானி சங்கர், இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 3 கோடியைத் தாண்டி சம்பளம் வாங்க உள்ளாராம். 2020 இல் மட்டும் 8 படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரியா பவானி சங்கரை புக்கிங் செய்து வருகின்றனராம். தமிழ் சினிமாவில் லக்கி ஹீரோயினாக மாறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
சமீபத்தில் வந்த மாபியா படத்தில் இவரது கதாபாத்திரம் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து புதிய கதாபாத்திரங்களை தேடி நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
விரைவில் நம்பர் 1 இடத்தையும் பிடிப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
