fbpx
Connect with us

Cinemapettai

இரண்டு மணிநேரம் இந்தியன் 2 கதையை சொன்னார்கள், நான் நடிக்க ஓகே சொல்லிட்டேன். வைரலாகுது இளம் நடிகை பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டு மணிநேரம் இந்தியன் 2 கதையை சொன்னார்கள், நான் நடிக்க ஓகே சொல்லிட்டேன். வைரலாகுது இளம் நடிகை பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 ரெடி ஆவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசை. இது அனைவரும் அறிந்த செய்தி.

ஒளிப்பதிவாளர் மாற்றம், சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இப்படத்தில் நடிப்பதை பிரியா பவானி ஷங்கர் உறுதி படுத்தியுள்ளார் இன்ஸ்டாகிராம் வாயிலாக.

ஷங்கர் சார் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். படம் பற்றி இரண்டு மணி நேரம் கதை சொல்லப்பட்டது. மெயின் கதாபாத்திரங்களில் ஒன்றாக எனது கதாபாத்திரம் இருக்க, உடனே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தேன். இதைத் தவறவிட நான் தயாராக இல்லை. ‌ஷங்கர் சார் மிக கனிவாக நடந்துக்கொண்டார்.

சில நாட்களாகவே இது எனது ஆர்வ மிகுதியை அதிகமாகியது. உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதை நான் நம்புகிறேன். ஆனால் கமல்ஹாசன் அவர்களுடன் முக்கிய ரோலில் , எனக்கு விருப்பமான சித்தார்த், குயின் லேடி காஜல் அகர்வாலுடன் ‌ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது என்பது ஒரு சேர பல முறை ஆசிர்வதிக்கப்பட்டவள் நான். இதுமட்டுமன்றி அனிருத் இசை வேறு ” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top