fbpx
Connect with us

Cinemapettai

4 மொழிகளில் கொடிகட்டி பறக்கப் போகும் பிரியா பவானி சங்கர்.. பொறாமையில் முன்னணி நடிகைகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 மொழிகளில் கொடிகட்டி பறக்கப் போகும் பிரியா பவானி சங்கர்.. பொறாமையில் முன்னணி நடிகைகள்

செய்தி வாசிப்பாளராக கால் பதித்த பிரியா பவானிசங்கர் பின்பு சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார். சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் மேயாதமான் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் பின்பு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ள பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, குருதி ஆட்டம், கசடதபற, களத்தில் சந்திப்போம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் முன்னணி  நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் ப்ரியா பவானி சங்கர். இந்த வாரத்தில் கூட அருண்  விஜய் நடிப்பில் வெளிவரும் மாஃபியா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ள மிக பிரம்மாண்டமான ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஞ்சு மனோஜ் தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன், இவர் தான் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் ஹிந்தியிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டிய தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top