fbpx
Connect with us

Cinemapettai

பரத், பிரியா பவானி சங்கர் இணைந்த வெப்சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ்.. டைம் டிராவல் அட்டகாசம்!

Videos | வீடியோக்கள்

பரத், பிரியா பவானி சங்கர் இணைந்த வெப்சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ்.. டைம் டிராவல் அட்டகாசம்!

காளிதாஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு பரத் தொடர்ந்து படங்களில் பிசியாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைம் தளத்திற்காக ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

இதில் பரத்துக்கு ஜோடியாக முதல் முறையாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளதால் இந்த வெப்சீரிஸ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காமெடியன்களான கருணாகரன், ரோபோ சங்கர் போன்றோரும் நடித்துள்ளனர். அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டைம் என்ன பாஸ்? என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டைம் டிராவல் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ஹிட்டடித்துள்ளது. ஆனால் இதில் பரத்துக்கு டப்பிங் பேசப்பட்டுள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.

இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் டைம் என்ன பாஸ் வெப் சீரீஸ் டிரைலர் இதோ:-

Continue Reading
To Top