Connect with us
Cinemapettai

Cinemapettai

சிங்கிள் பொண்ணாக பாய்ஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொள்ளும் பிரியா பவானி சங்கர்.. கலகலப்பாக்கும் ஹாஸ்டல் பட டீசர்

hostal-teaser

Videos | வீடியோக்கள்

சிங்கிள் பொண்ணாக பாய்ஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொள்ளும் பிரியா பவானி சங்கர்.. கலகலப்பாக்கும் ஹாஸ்டல் பட டீசர்

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர் தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.

அந்த வகையில் அசோக் செல்வன், சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் ஹாஸ்டல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top