fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரியா பவானி ஷங்கர் துப்பறியும் சர்வதேச திரில்லர்- பிளட் மணி விமர்சனம்

priya bhavani shankar

Reviews | விமர்சனங்கள்

பிரியா பவானி ஷங்கர் துப்பறியும் சர்வதேச திரில்லர்- பிளட் மணி விமர்சனம்

90 நிமிட படம். குவைத் நாட்டில் நாம் ஒருவரை கொலை செய்த நிலையிலும்; அந்த இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பு தொகை கொடுத்து மன்னிப்பு கடிதம் பெற்று அரசாங்கத்திடம் கொடுக்கும் பட்சத்தில் நம் தவறை மன்னித்து விடுதலை செய்யுமாம் அரசு. குறைந்த பட்ஜெட்டில் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களத்தில் உலக அரசியலை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சார்ஜுன்.

கதை– (கிஷோர்) அண்ணன் தம்பி ஜோடி இழப்பு தொகை பணத்தை கொடுத்த பின்பும் அவர்களுக்கு தூக்கு தண்டனையை அறிவிக்கிறது குவைத் அரசு. புதிதாக  நியூஸ் சேனலில் பொறுப்பெடுக்கும் பிரியா பவானி ஷங்கர் இந்த கேஸை பற்றி தான் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். ஆபிசில் எதிர்ப்பு, எடிட்டர் சப்போர்ட் மற்றும் மெட்ரோ சிரிஷின் உதவியுடன் ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்கிறார்.

இந்தியாவில் அப்பாவை நினைத்து வாடும் குழந்தை, குவைத்தில் தவிக்கும் அப்பாவி தமிழர்கள், இறந்து போனதோ ஈழத்து பெண் – இவர்களை இணைப்பது பிரியா பவானி ஷங்கர்.

சினிமாபேட்டை அலசல்– ஒரு தரமான திரில்லர் படத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளது, எனினும் இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சுமாரான இசை, படத்தொகுப்பு, செட் அமைப்பு என மைனஸ் விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சினிமாப்பாட்டை வெர்டிக்ட் – பிரியா பவானி ஷங்கருக்காக ஒரு முறை பார்க்கலாம் இப்படத்தை.

சினிமாபேட்டை ரேட்டிங் 2. 25 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top