Videos | வீடியோக்கள்
பிரியா பவானி சங்கரின் கட்டுடல் மேனியில் ஜிம் ஒர்க்கவுட்.. அதனை பார்த்து பயிற்சி செய்யும் ரசிகர்கள்
முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம்.
ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.
மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து அரை டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார்.
தற்பொழுது பிரியா பவானி சங்கர் அழகுக்கு காரணமான ஜிம் ஒர்க்கவுட் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
