fbpx
Connect with us

Cinemapettai

காதலருடன் சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்.. அந்த வார்த்தை சொன்னதால் ஆத்திரம் வந்ததாம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதலருடன் சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்.. அந்த வார்த்தை சொன்னதால் ஆத்திரம் வந்ததாம்

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தமிழில் வரிசைகட்டி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

பிரியா பவானி சங்கர் நடிகை ஆனதில் இருந்து தொடர்ந்து தன்னுடைய காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாக நினைத்த நேரத்தில் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதைப் போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ஜோடியாக வெளிநாடுகளுக்கும் சுற்றிக் கொண்டிருந்த இந்த ஜோடிக்கு இடையே மீண்டும் பிரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் இடம், உன்னுடைய சேர்க்கை சரியில்லை என்பதை போல அவரது காதலர் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது. இதை சமீபத்தில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.

எது எப்படியோ, பிரியா பவானி சங்கர் காதல் முறிவுக்கு கவலைப்படுவார்கள் இல்லையோ ரசிகர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழி தான்.

priya-bhavani-shankar-cinemapettai

priya-bhavani-shankar-cinemapettai

Continue Reading
To Top